Tuesday, May 24, 2011

எழுதாத பேனாவின் கிறுக்கல்கள்....

வெகு காலம் கதவு தாழ் போடப்பட்டே இருந்தது,
ஒரு மதிய நேரம், 
வெறுமையின் இறுக்கம் தாளாமல், 
கதவு திறக்கப்பட்டது....

ஆழ் கடலிலிருந்து பாய்ந்து வரும் வெள்ளம் போல,
அறையை நிரப்பியது காற்று...

வெறுமையின் ஏகாந்தம் காற்றால் கெட்டது....

காற்றுக்கு புத்துலகம் பிறந்து.....

Sunday, May 15, 2011

என் வாழ்கை....

தெள்ளத் தெளிந்த வானம்,
பளிங்கு வெயில்...
மயான அமைதி...
மிக மெல்லிய காற்றின் அரவம்....
காலில் மிதிபடும் சருகுகளின் சப்தம்...

பல நொடிகள் கசிகின்றன,

மிக தொலைவில் யாரோ அழைப்பது போன்ற குரல்...
திரும்பிப் பார்கையில், தொலைவில், எதோ நடப்பது போன்ற உணர்வு,
சருகுகள் பறக்கின்றன, மரங்கள் அசைகின்றன, 
நிகழ்வுகள் என்னை நெருங்குகின்றன...

எங்கும் புழுதி, சருகுகள் பறக்க விழிகளை மூடிக் கொள்கிறேன்...
காற்றின் ஊங்காரம் செவிகளை அடைக்கிறது...

சில நொடிகளில் நிகழ்வுகளின் வேகம் குறைகிறது...

தெளிந்த வானமும், மெல்லிய காற்றும் என்னைச் சூழ்கின்றது...

-- என் வாழ்கை...

கிறுக்கல் ஒன்று

ஏதேதோ செய்து எங்கெங்கோ திரிந்து,
வாழ்க்கைக்கு ஒவ்வொரு மனிதனும் எதோ சொல்ல முயல்கிறான்...

எண்ணங்களை குவித்து, மனதினை அடக்கி, சாதகம் செய்ய முயல்கிறான்....
ஆனால் ஒவ்வொரு முறையும் வாழ்கை புது அர்த்தங்களை உணர்த்துகிறது....

உணர்த்தும் எண்ணங்களை ஆராய முற்படும் போது மற்றொரு உணரல் நடக்கிறது....

இவை கண்டு சொல்கிறது மனித மனம், "வாழ்க்கையில் எல்லாமே முதல் அனுபவமாக இருந்துவிட்டால் என் செய்வது....????"

Friday, April 8, 2011

கனவுகளின் வினோதம்....

கனவுகளின் உலகம் விசித்ரமானது....

மனித எண்ணங்களின் ஊடே பயணிக்கும் சக்தி கனவுகளுக்கு உண்டு....

'கனவுகள் மெய்யாக, கனவு காண்பவன் ஜனிக்க அவசியமில்லை....
 மனித எண்ணங்களின் மொழி பேசி 
 தொலைதூரதிலிருந்து அண்ண நடை பயின்று வந்து முகம் தழுவும் காற்றைப்போல....
  மனித மனங்களில் பயணிக்கும் சக்தி கொண்டவை கனவுகள்....'

- என் எண்ணத்தில் பயணம் வந்த சொற்கள்....

Thursday, April 7, 2011

இன்றைய நினைவு....

கண்களை மூடி,
கனவுகள் இல்லாமல்,
நினைவுகளை தொலைத்து வாழ ஆசை...

Monday, March 21, 2011

மனது...

ஆசை...
கோபம்...
வலி...
வேதனை...
தோல்வி...
பேராசை...

இவை இல்லாமல், இயங்க மறுக்கின்றது மனது...

Sunday, March 6, 2011

மனதை உருக்கும்... இன்றும் படித்து நெகிழும் நண்பனின் கடிதம்...

நண்பா,

இன்று எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமைந்துவிட்டது. நான் இதுபோல் தெளிந்த அறிவுடன் அலுவலகம் வந்து நெடுநாள் ஆகிறது.

நம் பயணம் இன்னும் நெடுந்தூரம் இருக்கிறது. நான் உன்னைப் பார்த்து நிறைய கற்றுக் கொள்கிறேன், அமைதியாக. நாம் எங்கோ இருக்க வேண்டியவர்கள்.

காலத்தின் பிடியிலோ, கடவுளின் கட்டளையிலோ, அல்லது கருமத்தின் கருமத்தாலோ நாம் அகப்படவில்லை. நாம் நம்மாலேயே நடத்தப்படுகிறோம் என்று நான் உணர்ந்த உண்மை.

அனுபவங்கள் நல்ல ஆசான். நாம் அதை சேகரித்துக் கொள்வோம். கடந்த இரண்டு வருடங்களில் நடந்த நண்மைகளில் உன் தொழிலை ஒன்றாகக் கருதுகிறேன்.

நாம் இன்றளவும் இணைக்கோட்டில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இந்த பயணம் இனிதே இவ்வாறே தொடர நாம் இருவரையும் வேண்டிக்கொள்கிறேன்.

வாழ்க்கை....

அன்பின் கருணை,
துயரத்தின் உச்சம்,
மகிழ்ச்சியின் ஆரம்பம்,
காதலின் சாரல்,
நினைவின் எழுச்சி,
உழைப்பின் வெளிப்பாடு,
கண்ணீரின் கடல்,
இறையின் அனுபவம்,
உண்மையின் வெறுமை.....

வாழ்க்கை....

Friday, February 11, 2011

சிந்தனை...

நிசப்தத்தின் வெளிச்சத்தில் நிஜத்தைக் காண விழைகிறேன்....


வாழ்க்கையின் காரணமான நிஜத்தைக் காண விழைகிறேன்....


என்னை 'நான்' என்று உருவகிக்கும் நிஜத்தை காண விழைகிறேன்...


விழைந்ததை கண்டுவிட்டேன் என மனத்தின் இதழ் துளிர்கிறது...


எண்ணம், சொல், செயல்.... இவையே நான் எனத் தோன்றுகிறது...


நல்லது...


இம்மூன்றும் எங்கிருந்து உருவாகிறது என காண விழைகிறேன்...


தேடல் முடிந்தபாடில்லை....

Friday, January 28, 2011

ஆசை

தண்ணீரினுள் மூழ்கமாட்டேன் என வெளி வரும் பந்தை போல.....
.......மூழ்கமாட்டேன் என வெளி வருகின்றன......
........................ஆழ்மனதில் மறைய(கரைய) விரும்பா ஆசைகள்...

ஊற்று

செயலின் ஊற்று எண்ணம்....
.....எண்ணத்தின் ஊற்று என்னவகாக இருக்க முடியும்.....?

Tuesday, January 25, 2011

இப்படி எழுத வேண்டும் என்று தோன்றியது...

அடையாளங்கள் அழிந்து,
உணர்வுகள் சிதறி,
கோபங்களில் மூழ்கி,
வாழத் துவங்கிவிட்டேன் நான்...