Wednesday, July 1, 2020

How true Sartre's statement is..

Every existing thing is born without reason, prolongs itself out of weakness, and dies by chance.

Tuesday, May 24, 2011

எழுதாத பேனாவின் கிறுக்கல்கள்....

வெகு காலம் கதவு தாழ் போடப்பட்டே இருந்தது,
ஒரு மதிய நேரம், 
வெறுமையின் இறுக்கம் தாளாமல், 
கதவு திறக்கப்பட்டது....

ஆழ் கடலிலிருந்து பாய்ந்து வரும் வெள்ளம் போல,
அறையை நிரப்பியது காற்று...

வெறுமையின் ஏகாந்தம் காற்றால் கெட்டது....

காற்றுக்கு புத்துலகம் பிறந்து.....

Sunday, May 15, 2011

என் வாழ்கை....

தெள்ளத் தெளிந்த வானம்,
பளிங்கு வெயில்...
மயான அமைதி...
மிக மெல்லிய காற்றின் அரவம்....
காலில் மிதிபடும் சருகுகளின் சப்தம்...

பல நொடிகள் கசிகின்றன,

மிக தொலைவில் யாரோ அழைப்பது போன்ற குரல்...
திரும்பிப் பார்கையில், தொலைவில், எதோ நடப்பது போன்ற உணர்வு,
சருகுகள் பறக்கின்றன, மரங்கள் அசைகின்றன, 
நிகழ்வுகள் என்னை நெருங்குகின்றன...

எங்கும் புழுதி, சருகுகள் பறக்க விழிகளை மூடிக் கொள்கிறேன்...
காற்றின் ஊங்காரம் செவிகளை அடைக்கிறது...

சில நொடிகளில் நிகழ்வுகளின் வேகம் குறைகிறது...

தெளிந்த வானமும், மெல்லிய காற்றும் என்னைச் சூழ்கின்றது...

-- என் வாழ்கை...

கிறுக்கல் ஒன்று

ஏதேதோ செய்து எங்கெங்கோ திரிந்து,
வாழ்க்கைக்கு ஒவ்வொரு மனிதனும் எதோ சொல்ல முயல்கிறான்...

எண்ணங்களை குவித்து, மனதினை அடக்கி, சாதகம் செய்ய முயல்கிறான்....
ஆனால் ஒவ்வொரு முறையும் வாழ்கை புது அர்த்தங்களை உணர்த்துகிறது....

உணர்த்தும் எண்ணங்களை ஆராய முற்படும் போது மற்றொரு உணரல் நடக்கிறது....

இவை கண்டு சொல்கிறது மனித மனம், "வாழ்க்கையில் எல்லாமே முதல் அனுபவமாக இருந்துவிட்டால் என் செய்வது....????"

Friday, April 8, 2011

கனவுகளின் வினோதம்....

கனவுகளின் உலகம் விசித்ரமானது....

மனித எண்ணங்களின் ஊடே பயணிக்கும் சக்தி கனவுகளுக்கு உண்டு....

'கனவுகள் மெய்யாக, கனவு காண்பவன் ஜனிக்க அவசியமில்லை....
 மனித எண்ணங்களின் மொழி பேசி 
 தொலைதூரதிலிருந்து அண்ண நடை பயின்று வந்து முகம் தழுவும் காற்றைப்போல....
  மனித மனங்களில் பயணிக்கும் சக்தி கொண்டவை கனவுகள்....'

- என் எண்ணத்தில் பயணம் வந்த சொற்கள்....

Thursday, April 7, 2011

இன்றைய நினைவு....

கண்களை மூடி,
கனவுகள் இல்லாமல்,
நினைவுகளை தொலைத்து வாழ ஆசை...

Monday, March 21, 2011

மனது...

ஆசை...
கோபம்...
வலி...
வேதனை...
தோல்வி...
பேராசை...

இவை இல்லாமல், இயங்க மறுக்கின்றது மனது...