வாழ்க்கையின் நிலையாமையை குறிப்பதாக இவ்வாக்கியத்தின் பொருள் படலாம். ஆனால், இதன் பொருள் மிகவும் ஆழமானதாக நான் கருதுகிறேன்.
மனிதனுடைய அனுபவங்களை இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். சந்தோசம், துக்கம். இதில் எந்த நிலையிலும் மனிதன் சிக்கிவிடக்கூடாது என்பதுதான் மேற் கூறிய வாக்கியத்தின் பொருளாக இருக்க முடியும் என்று நம்புகிறேன்.
கடும் துக்கத்தில் இருக்கும் போது "இதுவும் கடந்து போகும்" என்று நினைக்கும் போது, "நாளை ஒரு விடியல் உண்டு" என்பது அர்த்தமாகிறது.
மிகுந்த சந்தோஷத்தில் இருக்கும் போது இதே வாக்கியம் : "இந்த சந்தோசம் நிலையில்லை என்பதை வலியுறுத்துவதாக அமைகிறது".
"இதுவும் கடந்து போகும்".
No comments:
Post a Comment