சில வருடங்களுக்கு முன்பு, எனது நண்பனின் வாயிலாக பகவத் கீதையின் தமிழாக்கமும் மேல்விளக்கமும் பாரதியாரால் எழுதப்பட்டிருக்கிறது என்று அறிந்தேன்.
ஆவல் மேலோங்க அப்பொழுதே முழுப் புத்தகத்தையும் படித்து முடித்தேன்.
அதில் என்னை மிகவும் கவர்ந்தது பாரதியின் முன்னுரைதான். பகவத் கீதையை பற்றி நான் கேட்டவற்றையும் எண்ணியவற்றையும் விட மிகவும் மாறுபட்டவையாக அமைந்திருந்தது அவருடைய கருத்து. எளிய நடையையும் பின்பற்றிஇருந்தார்.
பாரதியின் முன்னுரையில் இருந்து சில வாக்கியங்கள் :
யோகத்தில் நின்று தொழில்களைச் செய்'
நாம் எந்த தொழிலை செய்தாலும் சரி, அதை யோகத்தில் இருந்து செய்யவேண்டும் என மேற்கூறிய வாக்கியம் அறிவுறுத்துகிறது.
இதைப் படித்தவுடன் நம் மனத்தில் தோன்றும் அடுத்த வினா, யோகமாவது என்ன?
தொழிலுக்குத் தன்னைத் தகுதியுடையவனாகச் செய்து கொள்வதே யோகம் எனப்படும்.
யோகமாவது சமத்துவம். 'ஸமத்வம் யோக உச்யதே' அதாவது, பிறிதொரு பொருளைக் கவனிக்குமிடத்து அப்போது மனத்தில் எவ்விதமான சஞ்சலமேனும்
சலிப்பேனும் பயமேனும் இன்றி, அதை ஆழ்த்து, மனம் முழுவதையும் அதனுடன் லயப்படுத்திக் கவனிப்பதாகிய பயிற்சி.
இதை படித்தபின், கீதை பழைய நூல் என்பதும், துறவறம் மேற்கொள்பவர்கள் படிக்க வேண்டிய நூல் என்பதும் என் மனத்தில் இருந்து அழிந்தன.
இந்த கருத்தை நாம், நாகரீக வாழ்க்கையில் கூட பின்பற்ற முடியும். பின்பற்றுவது மிகவும் அவசியமானது என்றும் கருதுகிறேன்.
http://www.projectmadurai.org/pmworks.html என்ற இணைய தளத்தில் இருந்து இந்த புத்தகத்தை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.