Monday, March 21, 2011

மனது...

ஆசை...
கோபம்...
வலி...
வேதனை...
தோல்வி...
பேராசை...

இவை இல்லாமல், இயங்க மறுக்கின்றது மனது...

Sunday, March 6, 2011

மனதை உருக்கும்... இன்றும் படித்து நெகிழும் நண்பனின் கடிதம்...

நண்பா,

இன்று எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமைந்துவிட்டது. நான் இதுபோல் தெளிந்த அறிவுடன் அலுவலகம் வந்து நெடுநாள் ஆகிறது.

நம் பயணம் இன்னும் நெடுந்தூரம் இருக்கிறது. நான் உன்னைப் பார்த்து நிறைய கற்றுக் கொள்கிறேன், அமைதியாக. நாம் எங்கோ இருக்க வேண்டியவர்கள்.

காலத்தின் பிடியிலோ, கடவுளின் கட்டளையிலோ, அல்லது கருமத்தின் கருமத்தாலோ நாம் அகப்படவில்லை. நாம் நம்மாலேயே நடத்தப்படுகிறோம் என்று நான் உணர்ந்த உண்மை.

அனுபவங்கள் நல்ல ஆசான். நாம் அதை சேகரித்துக் கொள்வோம். கடந்த இரண்டு வருடங்களில் நடந்த நண்மைகளில் உன் தொழிலை ஒன்றாகக் கருதுகிறேன்.

நாம் இன்றளவும் இணைக்கோட்டில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இந்த பயணம் இனிதே இவ்வாறே தொடர நாம் இருவரையும் வேண்டிக்கொள்கிறேன்.

வாழ்க்கை....

அன்பின் கருணை,
துயரத்தின் உச்சம்,
மகிழ்ச்சியின் ஆரம்பம்,
காதலின் சாரல்,
நினைவின் எழுச்சி,
உழைப்பின் வெளிப்பாடு,
கண்ணீரின் கடல்,
இறையின் அனுபவம்,
உண்மையின் வெறுமை.....

வாழ்க்கை....